PMSBY திட்டம்: ரூ.20 இருந்தால் ரூ.200000 வரை விபத்து காப்பீடு பெறலாம்!! இதை மட்டும் செய்தால் போதும்!
நாட்டு மக்களின் நலனுக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று தான் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா.இந்த திட்டத்தில் வருடம் ரூ.20 செலுத்தினால் ரூ.2,00,000 வரை விபத்து காப்பீடு கிடைக்கும்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா(PMSBY) திட்டம்:
இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள பாலிசிதாரருக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் அவர் தேர்வு செய்த நாமினிக்கு ரூ.2,00,000 காப்பீடு கிடைக்கும்.பாலிசிதாரருக்கு விபத்து ஏற்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத அளவிற்கு ஊனம் ஏற்பட்டால் அவருக்கு ரூ.2,00,000 காப்பீடு கிடைக்கும்.பாலிசிதாரருக்கு சிறிய அளவில் விபத்து ஏற்பட்டால் அவருக்கு ரூ.1,00,000 காப்பீடு கிடைக்கும்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா(PMSBY) திட்ட தகுதிகள்:
1)இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
2)18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா(PMSBY) திட்டத்தில் சேர்ந்து பாலிசி எடுக்கலாம்.
3)ஏதேனும் ஒரு வங்கி கிளையில் கணக்கு தொடங்கி இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா(PMSBY) திட்டத்தில் சேர்ந்து பாலிசி எடுத்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து வருடம் ஒருமுறை ரூ.20 கழித்து காப்பீட்டு திட்டத்தில் வரவு வைக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா(PMSBY) திட்டத்தின் பிரீமியம் தொகை ரூ.12 ஆக இருந்து.அதன் பின்னர் பிரீமியம் தொகை ரூ.20 ஆக உயர்த்தப்பட்டது.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா(PMSBY) திட்டம் பற்றி மேலும் அறிந்து கொள்ள https://nationalinsurance.nic.co.in/en/about-us/pradhan-mantri-suraksha-bima-yojana என்ற அதிகாரப்பூர்வ இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.