நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் குழந்தை பாக்கியம் இல்லையா? அப்போ இந்த பொருட்களை சாப்பிடுங்க !!

Photo of author

By Sakthi

நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் குழந்தை பாக்கியம் இல்லையா? அப்போ இந்த பொருட்களை சாப்பிடுங்க
நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தை வரம் என்பது அனைத்து திருமணமான தம்பதிக்கும் வேண்டிய ஒன்று. ஒரு சிலருக்கு குழந்தை வரம் உடனே கிடைக்கும். ஒரு சிலருக்கு பல ஆண்டுகள் வரை நீடிக்கும். அதற்கு காரணம் விந்தணு, கருமுட்டை ஆகியவற்றின் தரம் குறைவது தான் காரணம். இதனால் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படும். இதனால் தான் குழந்தை இல்லை என்ற ஏக்கம் பலர். மத்தியில் உருவாகின்றது.
இந்த விந்தணு, கருமுட்டை ஆகியவற்றின் தரம் குறைவதற்கு காரணம் நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள் என்று சொல்லாம். எனவே நாம் தரமான சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்டு உண்ண வேண்டும். இந்த பதிவில் குழந்தையின்மை பிரச்சனையை தடுக்க உண்ண வேண்டிய உணவு பண்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் உணவுகள்…
* குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க நெல்லிக்காயை சாப்பிடலாம். நெல்லிக்காய் கருமுட்டையில் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகின்றது.
* குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க அஸ்வகந்தா டீ குடிக்கலாம்.
* குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்கும் முக்கியமான பொருள் குங்குமப்பூ. இந்த குங்குமப்பூ பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கின்றது.
* குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்க மாதுளம் பழத்தை சாப்பிடலாம். மாதுளம் பழம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி செய்யும். அதே போல இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் முக்கியமான பொருள் பீட்ரூட் ஆகும். பீட்ரூட்டையும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க நாம் சாப்பிடலாம்.
* கருவுறுதல் திறனை அதிகரிக்க பூசணி விதைகள் உதவி செய்யும். எனவே பூசணி விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர குழந்தையின்மை என்ற பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
* குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் மற்றொரு பொருள் சிலோன் பட்டை. இந்த சிலோன் பட்டையை நாம் பயன்படுத்தும் பொழுது கருவின் தரம் மேம்படும்.