அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.

0
158
After watching the movie Arundhati! College student died of body burning due to lack of faith in God?
After watching the movie Arundhati! College student died of body burning due to lack of faith in God?

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.

இந்தியா முழுவதும் வரும் 75 ஆவது  சுதந்திர தினத்தை கொண்டாட ஆர்வமாக தயாராகி வருகிறது.இந்நிலையில் நாட்டில் சில இடங்களில் இன்னும் சில நபர்களும் சரி மாணவிகளும் சரி மூடநம்பிக்கை ஒன்றை நடைமுறையில் இருப்பதாக கருதுகின்றனர்.

மூடநம்பிக்கையால் சிலர் தங்களது உயிரை விடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் தான் ரேணுகா பிரசாத் வயது 22.இவர் பி.யு.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.கல்லூரி மாணவரான இவருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம் இருந்ததாக தெரிகிறது.

அந்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னை பாவித்து கொள்வது வழக்கம். பிறகு அதன் போல் தானும் நடித்து வந்துள்ளார்.இந்நிலையில் சமீபகாலமாக அனுஷ்கா நடிப்பில் வெளியாகி இருந்த அருந்ததி திரைப்படத்தை ரேணுகா பிரசாத் பார்த்து வந்துள்ளார்.

அதை பார்த்த அவர் மறுபிறவி எடுத்து விடலாம். அந்த படத்தில் அனுஷ்கா தனது தலையில் தேங்காய்களால் அடித்து உயிரை மாய்த்து கொள்வார். பின்னர் அனுஷ்கா மறுபிறவி எடுத்து வரும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்நிலையில் தான் அனுஷ்காவை போல உயிரிழந்து மறுபிறவி எடுத்து விடலாம் என்று கருதிய ரேணுகா பிரசாத் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

சற்று நேரத்தில் அதே இடத்தில் உடல்கருகி அவர் உயிருக்கு போராடினார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரேணுகா பிரசாத் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதுகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்தி கொடுங்கள் என்று தந்தையிடம் கெஞ்சல் மறுபிறவி எடுப்பதற்காக ரேணுகா பிரசாத் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிருக்கு போராடினார்.

அவரது நிலையை கண்டு தந்தை கண்ணீர் விட்டு அழுதார். அப்போது ரேணுகா பிரசாத் தனது தந்தையிடம் எனக்கு முக்தி கொடுங்கள்!..முக்தி கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டார். அப்போது கண்ணீர்விட்டு அழுத தந்தை ரேணுகா பிரசாத்திடம் நான் உன்னை அருந்ததி படம் பார்க்க வேண்டாம் என்று கூறினேன்.

நீ கேட்கவில்லை என்று கூறியதுடன், நான் எப்படி உனக்கு முக்தி கொடுக்க முடியும் என்றும் கூறினார். இந்த உரையாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. இந்த சமூக திரைபடங்கம் அனைத்துமே ரசித்து பார்ப்பதற்கு மட்டுமே?மேலும் இது போன்ற செயலை இனி எவரும் நினைத்து பார்க்கவே கூடாது என இணையதளங்களின் சிலர் தங்களின் கருத்தை கூறி வருகின்றனர்.

Previous articleஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 20 சிறுமிகள் தேவையா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
Next articleகள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம்! தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்!