மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில்
பரபரப்பு!
ஆன்லைனில் எடுக்கும் வகுப்புகள் புரியாததால் குழம்பிய மாணவனை பெற்றோர் திட்டியதால் தூக்குப் போட்டுக் கொண்ட சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அடுத்த கரட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் விக்ரபாண்டி. விக்ரபாண்டி திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த கொண்டிருக்கிறார்.
கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் ஆக மாறி ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆன்லைனில் எடுக்கும் வகுப்புகள் புரியாததால் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை புறக்கணித்துள்ளார் விக்கிரபாண்டி.
புறக்கணித்த விஷயம் இளங்கோவனுக்கு தெரியவரவே இளங்கோவன் விக்ரபாண்டியை கண்டித்து உள்ளார் என கூறப்படுகிறது.
தந்தை கண்டித்ததை பொறுக்க முடியாத விக்ரபாண்டி வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார். அதைப் பார்த்த பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு விக்கிரபாண்டியை அருகே உள்ள தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் விக்ரபாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுபோன்ற பல மாணவர்களின் உயிர்களை ஆன்லைன் வகுப்புகள் காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அங்குள்ள மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.