கலகக் குரல் ஒலிக்க ஆரம்பித்த அதிமுக! இபிஎஸ் நிரந்தர முதல்வர் ! ஓபிஎஸ் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு!

0
163

தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணி (செப்டம்பர் 18) அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

சசிகலாவின் விடுதலை தேதி அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் இந்த பேரவையில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் இது பற்றிய சர்ச்சை எழுந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த கூட்டம் தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இன் வருகையின்போது அலுவலக வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக கோசங்களை எழுப்பினர். இந்த கோஷங்களுக்கு மத்தியில் ‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடியார் வாழ்க’ என்றும் ‘ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்’ என்றும் தொண்டர்கள் மத்தியில் இருந்து கலகக் குரல் ஒலித்தது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக கருத்தை அதிமுகவில் பற்ற வைத்தார். அந்த நெருப்பு இன்றும் அதிமுகவில் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. இபிஎஸ் ஓபிஎஸ் இன் கூட்டான முடிவினை அடுத்து அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வந்தது என நினைத்தனர்.ஆனால் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பஞ்சாயத்து அவ்வளவு எளிதில் முடிவுக்கு வரக்கூடிய விஷயமில்லை என்பதையே இந்த கருத்துக்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மிக முக்கியமான இந்த பிரச்சனையை இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து தீர்க்க போகிறார்களா? அல்லது இந்த பிரச்சனையை காரணமாக கொண்டு ஓபிஎஸ் தரப்பை சசிகலா டிடிவி தினகரன் தரப்பு தங்கள் பக்கம் இழுக்க போகிறார்களா? இந்த முயற்சிகள் ஏற்பட்டால் எடப்பாடி பழனிசாமி அதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதே தற்போது அவர் முன் உள்ள மிகப்பெரிய சவால். மேலும் அதிமுக அலுவலகத்தின் முன்பாக இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோருக்கு இன்று தனித்தனியாக ஆதரவு குரல்கள் ஒழித்து அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை நமக்குத் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

Previous articleஅதிமுக தலைமையகத்தில் கூடவுள்ள கட்சி கூட்டம்! முடிவெடுக்க உள்ள அதிமுக!
Next articleSBI -ல் காலிப்பணியிடம்