கருப்பு பேட்ச் அணிந்து சட்டசபைக்கு வருகை தந்த அதிமுக உறுப்பினர்கள்!

0
147

தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் நிறைவுபெற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது இந்த சூழ்நிலையில் இன்றைய தின சட்டசபை கூட்டத்தின் போது கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்து கொடநாடு விவகாரம் குறித்து போராட்டம் செய்தது. இந்த போராட்டத்தை அடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவரான பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் இருக்கும் தன்னுடைய எஸ்டேட் இருக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கமான நிகழ்வு. அவர் மறைவுக்குப் பிறகு கொடநாடு இல்லத்தில் ஒருசில கொள்ளை கும்பல் சயாம் உட்பட கூலிப்படையை சேர்ந்தவர்கள் கொடநாடு இல்லத்தில் கொள்ளையடிப்பதற்கு முயற்சி செய்தார்கள். இது நடந்த சமயத்தில்தான் அந்த கொள்ளையை தடுப்பதற்காக அந்த காவலாளி தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று தெரிவித்திருந்தார்.

கொள்ளை முயற்சி மற்றும் கொலை விவகாரம் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது இந்த வழக்கு முடியும் சூழ்நிலையில் சயான் என்பவருக்கு சம்மன் அனுப்பி ரகசிய வாக்குமூலத்தை திமுக அரசு எடுத்திருப்பதாகவும், அந்த வாக்கு மூலத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய நான், உட்பட ஒரு சில அதிமுகவின் முக்கிய பொறுப்பாளர்களின் பெயரை தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி வாக்குமூலம் வாங்கபட்டிருப்பதாக பத்திரிகைகளில் தகவல் வெளியாகி இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.

தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக திமுக இதனை செய்திருக்கிறது. திமுகவை சேர்ந்தவர்கள் நினைத்தது நடக்காது குற்றவாளிகளை ஜமீன்தாராக எடுப்பதற்கு உடந்தையாக இருந்தவர்கள் திமுகவின் வழக்கறிஞர்கள். அன்றைய திமுக வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடினார் ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுகவின் வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். மூன்று நீதியரசர்கள் கொடநாடு விவகாரத்தில் விரைந்து வழக்கை முடிக்க வேண்டும் என்று தெரிவித்து உத்தரவிட்டார்கள்.

அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்ட பின்னர் ஆட்சி மாற்றம் உண்டாகி கோடநாடு விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய திமுக வழக்கறிஞர்கள் இன்று அரசு தரப்பு வழக்கறிஞராக மாற்றப்பட்டு இருக்கிறார்கள். விசாரணையின்போது மறு விசாரணைக்காக கோரிக்கை வைக்கவில்லை. திமுகவின் வழக்கறிஞர்கள் வேண்டுமென்றே மறு விசாரணைக்கு அனுமதி கேட்ட சமயத்தில் அது மறுக்கப்பட்டது பல விஷயங்களை மறைத்து ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் முதல்வர் ஆகிய என் மீது போலியான வழக்கை பதிவு செய்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆகவே எங்கள் தரப்பில் நாங்கள் எதற்கும் பயந்தது இல்லை மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட ஒரு கட்சியை ஆரம்பிக்கும் போது பல பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதனை உடைத்தெறிந்து அவர்கள் வெற்றி கண்டார்கள் அதே விதத்தில் நாங்களும் செயல்படுவோம். பொய்யான வழக்குகளை நாங்கள் உடைப்போம் எந்த நேரத்திலும் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்போம். திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது என்பதால் அதனை பொதுமக்களுக்கு மறக்க வைப்பதற்காக அதிமுகவின் தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

Previous articleஅதிமுக எம்எல்ஏவின் அந்த கேள்வி! ஆவேசமாக பதிலளித்த நிதி அமைச்சர்!
Next articleபாஜகவில் இணையும் முக்கிய புள்ளி! நடுக்கத்தில் முதலமைச்சர்!