பாஜகவில் இணையும் முக்கிய புள்ளி! நடுக்கத்தில் முதலமைச்சர்!

0
79

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மக்கள் ஆசி யாத்திரை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இந்த யாத்திரையின் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்த யாத்திரை நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் முருகன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பாஜகவின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

அந்த சமயத்தில் உரையாற்றிய பாஜகவின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் முக அழகிரி மிக விரைவாக பாரதிய ஜனதா கட்சியில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம் என தெரிவித்தார்.தமிழ்நாட்டில் தாமரை மலரும் நாள் உருவாகி வருகிறது என பலரும் சொல்லி இருக்கிறார்கள். நாம் ஒரு நாளை புதிதாக உருவாக்க வேண்டும். மிக விரைவில் மதுரையிலிருந்து அழகிரியும் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நாளை நாம் உருவாக்கிக் காட்ட வேண்டும் என கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சி சுமார் 140 இடங்களில் வெற்றி பெறும் வரையில் அயராது நாம் அனைவரும் உழைத்திட வேண்டும் என்று சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.அழகிரி பக்கமிருந்து பார்த்தால் தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்வதற்கு முன்பாகவே திமுகவில் தனக்கென ஒரு தனி இடம் வேண்டும் என்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்த்து பல விதமாக அவர் செயல்பட்டு வந்தார்.

குறிப்பாக தேர்தல் நெருங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பாக அவர் தலைமையில் மதுரையில் நடைபெற்ற கூட்டம் பெரிய அளவில் பேசப்பட்டது.. அழகிரியின் ஒரே குறிக்கோள் தனக்கோ அல்லது தன்னுடைய மகனுக்கு திமுகவில் உரிய அதிகாரம் வழங்க வேண்டும் என்பதுதான். ஒரு கட்டத்திற்கு மேல் கட்சியில் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பில் அமர்த்தப்பட்ட திலிருந்து அழகிரி இது தொடர்பாக பலமுறை ஸ்டாலினிடம் மறைமுகமாக வலியுறுத்தி வந்தார். அத்துடன் திமுகவின் முக்கிய பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் அமர்த்தப்பட்டனர். தன்னுடைய மகனான தயாநிதி அழகிரிக்கு அறக்கட்டளையில் ஏதாவது பொறுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஸ்டாலினுக்கு தொடர்ச்சியாக முன்வைத்து வந்தார் அழகிரி.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே கட்சியில் ஊறிப்போன ஸ்டாலினால் கட்சியின் அதிகாரத்தை அவருக்கு பெற்றுத் தர முடியவில்லை. ஆகவே அழகிரியை பெரிய அளவில் அவர் எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில்தான் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும், எப்பொழுதும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது.

ஆகவே தற்சமயம் அழகிரி பாரதிய ஜனதா கட்சிக்கு செல்ல இருக்கிறார் என்று சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தைப் பொருத்தவரையில் எதிர்க்கட்சியான அதிமுக வை பார்த்து பயப்படுவதை விட தற்சமயம் தமிழக பாஜக வை பார்த்து தான் முதலமைச்சர் ஸ்டாலின் பயந்து போய் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் தான் இந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக ஒருசில விஷயங்களை அவர் செய்துவருகிறார். குறிப்பாக அறநிலை துறை சம்பந்தமான பல விஷயங்களை அவர் முன்னெடுத்து வருவது அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது ஏனென்றால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலையத் துறையிடம் தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அதிக அக்கறையுடனும், அதீத கவனத்துடனும், செயல்பட்டு வருகிறார்.

ஆகவே முதல்வர் ஸ்டாலினை பழிவாங்குவதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் அழகிரி தற்சமயம் பாஜகவில் இணைவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.