அதிமுக எம்எல்ஏவின் அந்த கேள்வி! ஆவேசமாக பதிலளித்த நிதி அமைச்சர்!

0
66

தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்று வருகின்றது. நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அதிமுகவின் கரூர் சட்டசபை உறுப்பினர் சம்பத்குமார் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருடைய கேள்விக்கு பதில் அளித்த மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற 10 வருடகாலமாக 40 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை என்ன ஆனது? எந்த ஆவணத்திலும் ஏன் குறிப்பிடப்படவில்லை? அரசு பெற்ற கடன் குறித்து நான் மிக நீண்ட விளக்கத்தை கொடுத்து இருக்கின்றேன் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் ஆவேசமாக பதில் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கு அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் சம்பத்குமார் தற்சமயம் தொடர்பாகப் பேசும் அமைச்சர் எதனடிப்படையில் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளையும் மக்களுக்கு அவர் சார்ந்த கட்சி அளித்தது என்று கேள்வி எழுப்பினார். இடைக்கால பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்யும்போது எங்கே இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார் சம்பத்குமார்.

இதற்கு பதில் தெரிவித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும்போது கடன் சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களுடைய தரப்பில் வெளிநடப்பு செய்தோம். ஆட்சிக்கு வந்தவுடன் அந்த ஆவணங்களை கவனிக்கும் போது தான் உங்கள் ஆட்சியில் கடன் சுமை தொடர்பான வித்தியாசங்கள் தெரியவந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் பழனிவேல் தியாகராஜன்.

பல நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் என்று இரவு பகலாக வெள்ளை அறிக்கையை தயார் செய்து இருக்கிறார்கள். நான் உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கு மிகவும் ஆவேசமாக பதில் அளித்து அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அத்துடன் அதிமுக சட்டசபை உறுப்பினர் இடம் நான் ஆவேசமாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

அந்த சமயத்தில் சபாநாயகர் அப்பாவு அமைச்சர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் பெருந்தன்மையுடன் அவர் மன்னிப்பு கேட்டு இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று தெரிவித்தார்.