பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுக்கு 25 எம்.பி சீட் உறுதி !!

0
80
#image_title

பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுக்கு 25 எம்.பி சீட் உறுதி !!

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகள் அதிமுக அமோக வெற்றி பெறும் எனக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதற்கு வாய்ப்பே இல்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சியும் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையிலான பாஜக கட்சியும் கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தான் தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் அதிமுக கூட்டணி பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதிமுக பாஜக கூட்டணி சரியில்லை என்றும் பாஜகவுடன் அதிமுக கைகோர்க்கக் கூடாது என்றும் அதிமுக தொண்டர்களை அப்போதில் இருந்தே கூறி வந்தனர்.

இருப்பினும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் நல்ல வெற்றியைப் பெற்றது. ஆளுங்கட்சியான அதிமுக 2021 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியாக மாறியது. அதன் பிறகு அதிமுக- பாஜக கூட்டணி தொடர்ந்து வந்தது.

இதற்கிடையில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, இருந்தே அதிமுக நிர்வாகிகளுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது அண்ணாமலை அவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் விமர்சித்து வந்தனர். அண்ணாமலை அவர்கள் அதிமுக கட்சியையும் ஜெயலலிதா அம்மா குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். தற்போது இந்த மோதல் போக்கு வெடித்தது கூட்டணியும் முடிந்துள்ளது.

தற்போது அதிமுக மூத்த நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் 25 தொகுதிகளுக்கு மேல் கட்டாயம் வெற்றி பெறலாமே என்று கூறுகின்றனர். ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் வைக்காவிட்டாலும் அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளை வெற்றி பெறுவது, அதிக சதவீத மக்கள் வாக்குகளைப் பெறுவது சந்தேகம் தான் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.