ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஆரம்பமே வெற்றியுடன் தொடங்கிய இந்திய வாலிபால் அணி!!!

0
80
#image_title

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஆரம்பமே வெற்றியுடன் தொடங்கிய இந்திய வாலிபால் அணி!!!

நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வாலிபால் அணி வெற்றியுடன் தனது பயணத்தை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடங்கியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தொடங்குகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் பல விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை பயன்படுத்தி தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பதக்கங்களை வென்று தங்கள் நாடுகளுக்கு பெருமை சேர்க்கின்றனர்.

வழக்கமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நடைபெற்று முடிந்த பின்னர் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு துவக்க விழா தொடங்குவதற்கு முன்னரே கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி விட்டது.

அந்த வகையில் இன்று(செப்டம்பர்19) இந்தியா வாலிபால் அணிக்கும் கம்போடியா வாலிபால் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய வாலிபால் அணி முதல் மூன்று செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

அதாவது கம்போடியா வாலிபால் அணிக்கு எதிராக இந்திய வாலிபால் அணி முதல் 3 செட்களை 25-14, 25-13, 25-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா வாலிபால் அணி தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது.