எடப்பாடியின் அதிரடி அறிவிப்பை பார்த்து திகைத்துப் போன ஸ்டாலின்

Photo of author

By Sakthi

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணி கட்சிகளுமே மக்களை கவருவதற்காக பல பல கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் திமுக சார்பாக குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்த அறிவிப்பு வெளியானவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்ப பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் இது திமுகவின் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இதேபோல திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புக்கும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் தான் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கியில் வைத்திருக்கும் நகை கடன் மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார். அடுத்த சில நாட்களிலேயே தற்போது கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் நகை கடன் மற்றும் விவசாய கடன்களை மட்டுமன்றி அதில் இருக்கக்கூடிய சுய உதவி குழுக்களின் கடன்களை மொத்தமாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

இதேபோல கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் பொழுது திமுக தரப்பில் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு அதுவரையில் வழங்கப்பட்டு வந்த 250 ரூபாய் ஓய்வூதிய தொகையானது 500 ரூபாய் வழங்கப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார். ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் பொழுது முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித் தொகையை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக அறிவித்து அதனை ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தியும் காட்டினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

அதேபோல கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது வீட்டுக்கு வீடு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வீட்டிற்கு நான்கு ஆடுகள் என்று மட்டுமல்லாமல் இன்னும் பற்பல கவர்ச்சியான அறிவிப்புகளையும் வெளியிட்டு அந்த தேர்தலில் வெற்றி பெற்றார் ஜெயலலிதா.அதேபோல 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார். அதேபோல அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்த பின்னர் அதனை செயல்படுத்தியும் காட்டினார் . அது தற்போது வரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடைபிடிக்கப்பட்டு தமிழகம் முழுவதிலுமே நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இப்படி திமுக என்ன தேர்தல் வியூகம் இருக்கிறது என்று தந்திரமாக தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல எதிர்வியூகம் அமைத்து தேர்தலில் போட்டியிட்டு திமுகவை எதிர்கொள்வதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வல்லவராக திகழ்ந்தார் .தற்போது அதே போன்ற ஆயுதத்தையே தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் எதிர்வரும் தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பில் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது .திமுக சார்பாக தேர்தல் வியூகம் வகுப்பதற்கு பிரசாந்த் கிஷோர் களமிறக்கப்பட்டு இருந்தாலும் அதனையும் மீறி கருத்துக்கணிப்பில் மறுபடியும் அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியில் அமரும் என்று அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுகவை மேலும் அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.

ஜெயலலிதா இருந்த காலத்தில் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி என்ன அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும் அதற்கு எதிரான சரியான அறிவிப்பை வெளியிட்டு திமுகவின் திட்டத்தை தவிடுபொடியாகும் வல்லமை பெற்றவர் ஜெயலலிதா என்று தெரிவிக்கப்படுகிறது. அதே புத்தி சாதுரியம் தற்போது இருக்கும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறது என்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது. அதே சமயத்தில் அது உண்மையாகவும் இருப்பதாக சொல்கிறார்கள்.
தான் எந்த வழியில் போனாலும் முதல்வரை பூஜ்ஜியம் ஆக்க முடியவில்லையே என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுப்பில் இருப்பதாக சொல்கிறார்கள் திமுக தொண்டர்களும் ஸ்டாலினின் ஆதரவாளர்களும்.