விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்!

0
250
Air ticket price increase! Passengers in shock!
Air ticket price increase! Passengers in shock!

விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனால் மக்கள் பெரிதளவில் பாதிப்படைந்தனர்.தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுபாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது.விமான சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.அதனால் சுற்றுலா,வெளிநாடு செல்வோர், சொந்த ஊருக்கு செல்வோர் என உள்நாட்டு வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

மேலும் வரும் ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் விடுமுறை என்பதால் வெளிநாடு,உள்நாட்டு சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான பயணிகள் திட்டமிட்டு வருகின்றனர்.சுற்றுலா செல்லும்  பயணிகள் விமான டிக்கெட் முன்பதிவை தொடங்கி விட்டனர்.

இப்போதே விமான டிக்கெட்டுகள் நிறைவடைந்து வருகின்றது.அதன் காரணமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது.அந்தவகையில் வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து கோவா செல்வதற்கான டிக்கெட் ரூ 4500 ல் இருந்து ரூ 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ 4ஆயிரமாக இருந்த டிக்கெட் தற்போது 5 ஆயிராமாக அதிகரித்துள்ளது.அதனை தொடர்ந்து மதுரைக்கு ரூ 3500 ல் இருந்து ரூ 4000,துபாயில் இருந்து சென்னைக்கு வருவதற்கு ரூ 25 ஆயிரம் முதல் ரூ 35 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.இதனை தொடர்ந்து மும்பை விமான டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு டெல்லி பயணம்! ஆறுதல் கூறிவரும் ஆதரவாளர்கள்!
Next articleமின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?