மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

0
296

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டு மின் வாரியம் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியது.இதனை அடுத்து, கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் மின் வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. முதலில் இது குறித்து ஆர்வம் காட்டாத பொதுமக்கள் அதனை தொடர்ந்து மின் வாரியத்தின் விளக்கத்தை அடுத்து பொதுமக்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர்.

இதற்கென 2,811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு ஜனவரி 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இதுவரை 2 கோடிபேர் இணைத்துள்ள நிலையில், மீதமுள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று மின் வாரிய ஊழியர்கள் இணைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீடிக்கப்படலாம் தகவல்கள் வெளி வருகின்றன.

Previous articleவிமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்!
Next articleசேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here