அஜித்தைக் கோபமாக்கிய துணிவு பட தகவல்… பின்னணி என்ன?

Photo of author

By Vinoth

அஜித்தைக் கோபமாக்கிய துணிவு பட தகவல்… பின்னணி என்ன?

Vinoth

அஜித்தைக் கோபமாக்கிய துணிவு பட தகவல்… பின்னணி என்ன?

அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

படத்தில் சென்னையின் மையப்பகுதியான மவுண்ட் ரோட் பகுதியில் நிறையக் காட்சிகள் இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளதாம். ஆனால் அந்த காட்சிகளை கிராபிக்ஸ் மூலமாகதான் உருவாக்க உள்ளார்களாம். அதற்கான கிராபிக்ஸ் பணிகள் இப்போது நடந்துவரும் நிலையில் எதிர்பார்க்கும் நாட்களுக்குள் முடிக்க முடியாத அளவுக்கு பணிகள் மெதுவாக நடந்துள்ளதாக தெரிகிறது.

இந்த தகவல் அஜித் காதுக்கு சென்ற நிலையில் கோபமாகி எப்படியாவது பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறிதியாக கூறிவிட்டாராம். மேலும் கிராபிக்ஸ் செய்யவேண்டிய காட்சிகளை மேலும் சில நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் படி கேட்டுள்ளாராம்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார். துணிவு ரிலீஸ் ஆகும் அதே நாளில்தான் விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் உதயநிதி நேரடியாக ரிலீஸ் செய்வதால் வாரிசு திரைப்படத்தை விட துணிவு படத்துக்குதான் கூடுதலாக திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது துணிவு படத்துக்காக தியேட்டர்கள் முன்பதிவு செய்யும் பணிகளை ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.