கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பத்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு! 

0
186
Football player Priya died without treatment! An order to provide relief of ten lakhs!
Football player Priya died without treatment! An order to provide relief of ten lakhs!

கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பத்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி உஷாராணி.இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார்.இவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து வந்தார்.இவர் கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.மேலும் இவர் கால்பந்து வீராங்கனை ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் தினந்தோறும் பயிற்சி மேற்கொள்வார்.

இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று வழக்கம் போல்  பயிற்சி மேற்கொண்டார் அப்போது அவருடைய வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலி இருந்தது. அந்த வழியால் அவதிப்பட்டு வந்தார்.அதனையடுத்து அவரை பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து பிரியாவிற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அவர்கள் கூறியது போல அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அதற்கு அடுத்த நாளே அவருடைய கால் பெரிய அளவில் வீங்கி இருந்தது.இதையடுத்து அவருடைய உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிராயவிற்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதனால் உடனடியாக அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருடைய வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதன் காரணமாக மருத்துவமனை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ பத்து லட்சம் நிவராணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர்.தவாறன முறையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K