மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனை! உடனடியாக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

0
100

சென்னை வியாசர்பாடியை சார்ந்த 17 வயது சிறுமி பிரியா சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். எளிமையான குடும்பத்தைச் சார்ந்த இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மேலும், கால்பந்து விளையாட்டில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று அவர் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சி என்பது பிரியாவின் வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலியின் காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பிரியாவின் காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து பெரம்பூர் பெரியார் நகரில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது அறுவை சிகிச்சை மேற்கொண்ட சமயத்தில் வலி குறையவில்லை. கால் பகுதியில் வீக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பிரியா. அவரை பரிசோதித்த சமயத்தில் அவருடைய வலது காலில் ரத்த ஓட்டம் தடை பட்டிருப்பது தெரிய வந்தது.

மருத்துவர்கள் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில், இருப்பதால் காலை அகற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அவருடைய வலது கால் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் அவருடைய உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் அடுத்தடுத்து செயலிழந்து தொடர்ந்து கால்பந்து வீராங்கனை பிரியா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருடைய உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.