அஜித்தால் விஜய்யை நெருங்க முடியாது வெடித்தது புதிய சர்ச்சை!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவருமே மிக சிறந்த கதாநாயகனாக வலம்வருபவர்கள். இவர்கள் இருவரின் படம் வெளிவரும் போதும் பெரும் பரபரபும் எதிர் பார்ப்புகளும் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்று.
இச்சமயத்தில் விஜய் வாரீசு படத்தில் நடித்து வருகிறார். அஜித் துணிவு படத்தில் நடித்து வருகிறார், இவ்விரு படங்களும் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரஉள்ளதை தொடர்ந்து சினிமா விமர்சகர் வலைபேச்சு பிஷ்மி யாருடைய படம் அதிக வசூல் செய்யும் என்பது குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளர்.
அவர் கூறியதாவது எப்போதும் விஜய் படம் தான் அதிக வசூலில் இருக்கும் என்றும் , விஜய் படம் வசூல் செய்வதில் 75% கூட அஜித் படம் வசூல் செய்வதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் விஜய் தமிழ் படங்களை தாண்டியும் பல்வேறு மொழிப்படங்களில் புதுமுக இயக்குனர்களுடன் கைகோர்த்து வெற்றி படங்கள் பலவற்றை கொடுத்து வருகிறார். இதன் காரணமாக இவர் தனது மார்கெட்டை தக்கவைத்துகொண்டு இருக்கிறார்.
மேலும் இவர்கள் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படத்தை எடுத்துக்கொண்டால் வலிமை படத்தை விட மூன்று மடங்கு அதிகமாக பீஸ்ட் படம் வசூல் செய்திருந்தது என்று கூறியுள்ளார்.