கோலிய குத்தம் சொல்லனன்னா தூக்கம் வராது… கம்பிரீன் அடுத்த சர்ச்சை கமெண்ட்!

0
78

கோலிய குத்தம் சொல்லனன்னா தூக்கம் வராது… கம்பிரீன் அடுத்த சர்ச்சை கமெண்ட்!

இந்திய அணியின் வீரர் கோலியை விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டு பேசி வருகிறார் கவுதம் கம்பீர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, நேற்றைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இந்த போட்டியில் அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரால் விராட் கோலிக்கு பவுன்சர் வீசப்பட்டது. அந்த பந்தை எதிர்கொண்ட கோலி, நடுவரைப் பார்த்து, அதை நோ-பால் கேட்டார். நடுவரும் நோ பால் கொடுத்தார். ஆனால் பங்களாதேஷ் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் விராட் நடுவருக்கு கோலி அழுத்தம் கொடுப்பதாக அதிருப்தி அடைந்தார். இதனால் கோலியும் ஷகிப்பும் கலத்தில் இது குறித்து விவாதித்தனர்.

இதற்கிடையில், கெளதம் கம்பீர் கோலியின் இந்த செயல் குறித்து – “ஒரு பேட்ஸ்மேன் நடுவரிடம் நோ பால் கொடுக்க சொல்லி கேட்கக் கூடாது. அவர் பேட்டில் விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.” எனக் கூறியுள்ளார். கோலியின் செய்கை வழக்கமாக பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் செய்வதுதான். அவர் தன்னுடைய செயலுக்கு களத்திலேயே பங்களாதேஷ் கேப்டனுக்கு விளக்கம் அளித்துவிட்டார்.

இருந்தும் கம்பீர் இப்படி பேசி இருப்பது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. எப்போதுமே கம்பீர், கோலியை விமர்சிப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றுதான்.