பைக் டூர் செல்கின்ற அஜித்!! வெளியாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

0
42
Ajith going on a bike tour!! Latest photo released!!
Ajith going on a bike tour!! Latest photo released!!

பைக் டூர் செல்கின்ற அஜித்!! வெளியாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.1992 களில் வெளியான பிரேம புத்தகம் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பிறகு தமிழில் அமராவதி என்னும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார்.

என்னதான் நடிகர் அஜித் குமார் அவர்கள் சிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் அவருக்கு கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதில் அதிக ஆர்வம் காட்டினார்.

இந்த வகையில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம்  துணிவு. அதன் பிறகு அவர் விடாமுயற்சி என்னும் படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். முதலில் விக்னேஷ் சிவன் அவர்கள் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு  பிறகு சில காரணங்களால் விலகி கொண்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

முதலில் அஜித் பிறந்த நாளையொட்டி விடாமுயற்சி என்னும் டைட்டில் மட்டுமே விடப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு  அந்த படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளிவராதா என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷ்ட்டிங் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்க உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது

அந்த வகையில் அஜித் அவர்களின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது.தற்பொழுது அஜித் சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளார். இதனால் எப்பொழுது விடாமுயற்சி படபிடிப்பு பணிகள் தொடங்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் அஜித் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதால் படபிடிப்பு பணிகள் தொடங்க எப்படியும் மேற்கொண்டு உள்ளதால் படபிடிப்பு பணிகள் தொடங்க எப்படியும் 3 அல்லது 4 மாதங்கள் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K