அறநிலையத்துறையில் நேர்முகத்தேர்வின் மூலம் பணி நியமனம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

0
40
Job appointment through interview in charity department!! Important Announcement!!
Job appointment through interview in charity department!! Important Announcement!!

அறநிலையத்துறையில் நேர்முகத்தேர்வின் மூலம் பணி நியமனம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தான் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆவார். தற்போது இவரின் தலைமையில், அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகள் மற்றும் பணி முநீற்றம் குறித்து விவரங்கள் தொடர்பாக மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடந்தது.

அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது, ஒருநாள் முழுவதும் அன்னதான திட்டம் மொத்தம் எட்டு கோவில்களிலும், ஒரு வேளை மட்டும் அன்னதான திட்டம் மொத்தம் 764  கோவில்களிலும் நடைபெற்று வருகிறது.

மேலும், இரண்டு கோவில்களில் முழுநேர அன்னதானமும், ஏழு கோவில்களில் ஒரு வேளை அன்னதானமும் வருகின்ற செப்டம்பர் மாதம் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்படும்.

இதற்கான அனுமதி சட்டமன்ற அறிவிப்பில் ஏற்கனவே வெளியாகி விட்டது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். மேலும், இதற்கான பணிகள் அனைத்தும் திருச்செந்தூர், பெரியபாளையம், பழனி, திருத்தணி, திருவண்ணாமலை,

சமயபுரம், மருதமலை மற்றும் சிறுவாபுரி, மேல்மலையனூர் போன்ற கோவில்களில் ரூபாய் 1,495  கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மயிலாப்பூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருநெல்வேலி, பேரூர் உள்ளிட்ட கோவில்களில் மகாசிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த ஆண்டு மதுரை மற்றும் திருவானைக்காவலில் நடக்க உள்ள மகா சிவராத்திரி விழா குறித்து விவாதித்து வருவதாக கூறி உள்ளார். கோவில் நிலங்களை பாதுகாக்க ரோவர் என்னும் கருவி மூலமாக ரூபாய் 1,34,547  ஏக்கர் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டுள்ளது.

மேலும், அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிப்பை முடித்த மொத்தம் 150  அர்ச்சகர்களுக்கு மாதம் ரூபாய் 6 ஆயிரம் என்ற சம்பளத்தில் கோவில்களில் உதவி அர்ச்சகர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.

author avatar
CineDesk