துணிவு படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Photo of author

By Vinoth

துணிவு படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Vinoth

துணிவு படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பதை படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே பொங்கலுக்கு வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கலுக்கு கடுமையான போட்டி நிலவும் என்று சொல்லப்படுகிறது. அனேகமாக ஜனவரி 11 அல்லது 12 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. நீண்ட நாட்களுக்கு அஜித் படத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. அதே போல ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இருக்கும் நிலையில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி என இரண்டு உரிமைகளையும் வெவ்வேறு நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.