“கொரோனா எனது சகோதரனை காவு வாங்கிவிட்டது”: கண்ணீர்விடும் அக்‌ஷரா ஹாசன் 

0
74

நடிகர் கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன்.  இவருக்கு நடிப்பதைவிட டெக்னீசியன் ஆக பணிபுரிவதில் தான் அதிக ஆர்வம். இருந்தபோதிலும்  இயக்குநர் ஆர். பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக  அறிமுகமானார். பின்னர் தமிழில் இயக்குநர் சிவாவின் ‘விவேகம்’ படத்தின் மூலம்  காலடி எடுத்து வைத்தார்..

அதன்பின்பு, விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’  படத்திலும் நடித்துள்ளார். தற்பொழுது விஜய் ஆண்டனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘அக்னிசிறகுகள்’ படத்திற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

ஹிந்தியில் இவர் நடித்த, ‘ஷமிதாப்’ படத்தின்  மேக்கப்மேன் சச்சின்தாதா, கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இந்த செய்தியை கேட்டுஅக்‌ஷரா, அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இந்த கொரோனா தாக்கத்தால் பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களை இறந்துள்ளனர். தற்பொழுது என் இதயமும் மிகுந்த கனத்தில் உள்ளது.

தற்போது, “ஷமிதாப்” படத்தில் நடித்ததில் இருந்து எனக்கு மேக்கப் கலைஞராக இருந்த என் சகோதரர், ‘சச்சின் தாதா’ கோவிட்19 பாதிப்பால் இறந்துவிட்டார். அதனால் இந்த பதிவை மிகவும் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.

சச்சின் தாதா,ஒரு நல்ல திறமைசாலி, எந்த விஷயத்தையும் சந்தோசமாக ஏற்கும் குணமுடையவர், இதையெல்லாம் தாண்டி,அவர் எனக்கு நல்ல நண்பன். அவர், இறந்த சோகத்தில் ஆழ்ந்துள்ள அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் என்று இன்ஸ்டாகிராமில் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். 

 

author avatar
Parthipan K