வெளியானது பிளஸ் 1 தேர்வுகள் ! மாணவிகள் அதிகம் தேர்ச்சி!!! கோவை முதலிடம்!

0
53

வெளியானது பிளஸ் 1 தேர்வுகள் ! மாணவிகள் அதிகம் தேர்ச்சி!!! கோவை முதலிடம்!

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தார்கள். இதில் 96.04 விழுக்காடு மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

வழக்கத்தை போலவே மாணவிகளே மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in இணையதளத்தில் பார்க்கலாம்.

தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 வரை பிளஸ் 1 தேர்வுகள் நடைபெற்று இருந்தது. 8,32,475 கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுகளை எழுதி இருந்தார்கள். இன்று காலை ஒன்பதரை மணி அளவில் பிளஸ் 1தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

27 ஆம் தேதி மறு தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கும் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேர்வு முடிவுகளை பார்க்க விரும்பும் மாணவர்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி குறித்த விவரங்களை கொடுத்து பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்களுக்கு தனித்தனியாக குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வுகள் அனுப்பப்படும்.மாணவர்கள் www.tnresults.nic.in, https://dge1.tn.nic.in/ , http://dge2.tn.nic.in/ ஆகிய இணையதள வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

மதிப்பெண் அட்டவணையை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் அவர்கள் காலை 9.50 மணி முதல் www.dge.tn.in என்ற இணையதளத்தில் இருந்து தங்களுடைய அனைத்து மாணவர்களின் மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

விடைத்தாளின் நகல் வேண்டுமென நினைப்போருக்கும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிபவர்களுக்கும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால் தேர்வுகள் எழுத முடியாத நிலையில் அரசு அறிவித்தது போல காலாண்டு அரையாண்டு மற்றும் வருகை பதிவேடு போன்ற மதிப்பெண் விபரங்களை எடுத்து மதிப்பெண்கள் போடப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது..

வழக்கத்தை போலவே மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவியர்களில் 97.49 விழுக்காடு மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்கள் 94.38. விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளே 3.11 சதவீதம் மாணவர்களைவிட அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2700 மேற்பட்ட பள்ளிகளில் 100 சதவீதம் மாணவ மாணவிர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவை பிளஸ் 1 தேர்வில் முதல் இடத்திலும்,விருதுநகர் இரண்டாவது இடத்திலும் மற்றும் கரூர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. கடைசியாக விழுப்புரம் இடம் பிடித்துள்ளது.

author avatar
Kowsalya