அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!!

0
181
All panchayats should follow this!! Notification of Central Government!!
All panchayats should follow this!! Notification of Central Government!!

அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!!

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும்.

இது பஞ்சாயத்து தொடர்பான அனைத்து விதமான தரவுகளையும் மேற்பார்வையிடுவதாகும். இந்த திட்டம் மே மாதம் 2004 இல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியால் நிறுவப்பட்டது. இந்த வகையில் தற்போது இந்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கடிதம் ஒன்றில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்து துறைகளும் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வளர்ச்சிப் பணிகளுக்கும் மற்றும் வருவாய் சேகரிப்புக்கும் டிஜிட்டல் முறையிலான கட்டணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் இவை அனைத்தும் UPI  மயமானதாக அறிவிக்கப்படும் என்றும் மத்திய பஞ்சாயத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், எம்.பி.க்கள். மற்றும் எம்.எல்.ஏ.க்கள். போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் இவர்கள் முன்னிலையில், UPI மயமான பஞ்சாயத்துகளை மாநிலங்கள் அறிவித்து துவங்க வேண்டும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதத்தை மத்திய அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ளது.

Previous articleசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! கருப்பு உடை குறித்து சர்ச்சை!!
Next articleஇந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு !!