அனைத்து சிறை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி அன்று சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் குறித்து அதற்கான புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டார்.
அதில், சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகளுக்கான துறையில் வேலை செய்யும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான சம்பளம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதாவது, இவர்களுக்கான சம்பளம் காவல்துறை ஆளுநர்களுக்கு இணையான சம்பளமான இருநூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், இவர்களுக்கான இடர் படி ஊதியமும் ரூபாய் 800 லிருந்து ரூபாய் ஆயிரம் வரை உயர்த்தப்படும் என்று ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி நடந்த சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த துறைகளின் கீழ் அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.
இவர் அறிவித்ததின் அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மிகை நேர சம்பள உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் அந்த அரசாணையில், சிறைத்துறையில் வேலை செய்யும் தமிழகத்தின் அனைத்து முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை பணியாளர்களுக்கு இருநூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய் உயர்த்தி ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஊதிய உயர்வுக்கு ரூபாய் 3.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக சிறை காவலர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.