பிரதமர் மீதான ஊழல் வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன

0
144

1MDB ஊழல் தொடர்பான முதல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, 1MDB முதலீட்டு நிதியிலிருந்து  நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்குக்கு 10 மில்லியன் டாலர் தொகை மாற்றிவிடப்பட்டது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. சுமார் ஈராண்டுகளுக்குப் பிறகு நஜிப் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாகப் பல்வேறு நபர்களிடம் 1MDB முதலீட்டு நிதி முறைகேடு தொடர்பில் அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். அதனையடுத்து முதல் ஊழல் வழக்கில் நஜிப் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. நிதி மோசடி தொடர்பில் நஜிப் மேலும் சில வழக்குகளையும் எதிர்நோக்குகிறார்.

Previous articleஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் இரண்டாவது நாளாக  தீவிர விசாரணை
Next articleபிரதமரின் ஊழல் நிரூபணம் : 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை