இந்த லிங்கை டச் செய்தால் போதும்!!திருடன் போட்ட பிளான்? பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!!
கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்லை சேர்ந்தவர் தான் நடராஜன். இவருக்கு வயது 83. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.குறுஞ்செய்தியில் இன்று இரவு நீங்கள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் உங்கள் மின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும் என தகவல் வந்துள்ளது.உடனே நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை டச் செய்தால் போதும்.
அந்த லிங்கில் கேட்கப்படும் விவரங்களை பதிவிட்டு மின் கட்டணம் செலுத்திடலாம் என்று கூறியிருந்தது. செய்வதென்று தெரியாமல் அந்த ரயில்வே ஊழியர் கீழே உள்ள லிங்கை டச் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தையும் பதிவிட்டுள்ளார்.அதில் வங்கி கணக்கு எண்களையும் பதிவிட்டு இருந்தார்.அந்த லிங்கில் பத்து ரூபாய் தன் கணக்கில் இருந்து செலுத்தினார்.
பிறகு நடராஜன் அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் 8 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக அவர் மொபைலில் எஸ்.எம்.எஸ் வந்தது.அதை பார்த்து பெரு அதிர்ச்சி அடைந்த நடராஜன் சைபர் கிரைம் போலீசார்களிடம் புகார் அளித்தார்.இப் புகாரின் பேரில் காவல்துறையினர் மேற்படி நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.மேலும் இச்செய்தியை அனுப்பிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.