அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!! 

0
251
Alliance with AIADMK.. Sudden meeting with EPS?? That's what we went for - Pamaga MLA!!
Alliance with AIADMK.. Sudden meeting with EPS?? That's what we went for - Pamaga MLA!!

அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சி முதல் எதிர்கட்சி வரை அனைவரும் கட்சி வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக அனைத்து கட்சிகளும் நாங்கள் தனித்து நிற்போம் என்று கூறிவந்த நிலையில், தேர்தல் நெருங்கும் பட்சத்தில் கூட்டணி குறித்து பேச்சுக்கள் எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த லோக்சபா தேர்தலில் பாமக கூட்டணி வைத்து நிற்பதாக தெரிவித்தது.கூட்டணி குறித்து பாமக தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்ததும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வைப்பது குறித்து  ராமதாஸிடம் கலந்துரையாடியதாக தகவல்களும் வெளிவந்தது.

ஆனால் அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து எதுவும் கூறப்படவில்லை.அதிமுகவும் தங்களின் கட்சியை பலப்படுத்த ஒரு பக்கம் பாமகவையும் மறுபக்கம் தேமுதிக-வையும் நாடி இருக்கிறது.இதனிடையே தேமுதிக கேட்கும் சீட்டுகளை அதிமுக வழங்கினால் மட்டுமே இந்த கூட்டணி அமையும் என தெரிவிப்பதாக பல தகவல்கள் வெளியானது.அதேபோல நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக மற்றும் பாமக இருவரும் அவையை விட்டு வெளிநடப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு இன்று பாமக எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததாக பல தகவல்கள் வெளியானது.இது குறித்து பாமக எம்எல்ஏக்களிடம் கேட்ட பொழுது, நாங்கள் அவரை சந்திக்க செல்லவில்லை.மாவட்ட ரீதியான சில புகார்கள் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கீதா ஜீவனை சந்திக்க சென்றோம்.கீதா ஜீவன் வீட்டிற்கு முன்பு எடப்பாடி அவர்களின் வீடு இருந்ததால் அங்கே தங்களின் காரை நிறுத்திவிட்டு சென்றதாக கூறியுள்ளனர்.

வேற எந்த காரணங்களுக்காகவும் அங்கு செல்லவில்லை எடப்பாடியை காணவில்லை என்று பாமக எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் அரசியல் சுற்று வட்டாரங்களில், இவர்கள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.