கர்நாடகா கோவில்களுக்கு எகிறும் வரி சதவிகிதம்!!

0
245
#image_title

கர்நாடகா கோவில்களுக்கு எகிறும் வரி சதவிகிதம்!!

கர்நாடகாவில் நடைப்பெற்ற பட்ஜெட் தாக்கலில் கோவில்களின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோயில்களுக்கு 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் மற்றும் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடியைத் தாண்டினால் 10 சதவீத வரி செலுத்த வேண்டும் என மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்துக்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் இது போன்ற செயல்களை செய்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு தவறான திட்டங்களால் போதுமான வருமானம் இன்றி தவிக்கிறது எனவே, கோவில்களில் வரும் வரி பணத்தில் கோவில்களை பராமரிப்பது, சீரமைப்பது போன்ற செயல்களுக்கு பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகிறது.

இதனை ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவே இந்த சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.