அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணமுராரி, உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது. சென்ற 25 ஆம் தேதி நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கின்ற சந்தேகம் தொடர்பாக விசாரிக்கும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்து அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் உணவு கூடத்தின் அளவு கூட இல்லாத இடத்தில் இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் இன்றைக்குள் அதாவது நவம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் இந்த விசாரணை ஆணையம் செயல்படுவதற்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவிட்டனர் அதோடு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்து இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்டு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கூடுதலாக 500 சதுர அடி இடம் ஒதுக்கி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி சென்னை எழிலகம் வளாகத்தில் இருக்கின்ற கலச மஹாலில் கூடுதலாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.