கடைசி நிமிடத்தில் டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

0
79

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி வரையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் கடைசி விக்கெட்டை எடுக்க இயலாமல் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் குவித்த சூழ்நிலையில், நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு 49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 234 ரன்களை எடுத்தது. இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக 283 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி.

இதனைத்தொடர்ந்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நியூசிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட்டை பறிகொடுத்து 4 ரன்களை எடுத்திருந்தது. டாம் லாதாம் 2 ரன்களுடனும் வில்லியம் சுவாமி மர்வெல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தார்கள்.

நேற்று கடைசி நாள் ஆட்டத்தின்போது 229 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில், இருவரும் களம் புகுந்தார்கள் இந்திய ஆடுகளத்தில் கடைசி நாள் ஆட்டத்தில் 279 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம் இதன் காரணமாக இந்தியா எளிதில் வெற்றி அடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் மதிய உணவு இடைவேளை வரையில் முதல் ஷேஷனில் டாம் லாதம், வில்லியம் சோமர்வில், உள்ளிட்டோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். இருவரும் தங்களுடைய விக்கெட்டை இழந்து விடாமல் பார்த்துக்கொண்டார்கள். அஸ்வின், அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஜடேஜா உள்ளிட்டோர் மாறி, மாறி பந்து வீசியும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.

நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை சமயத்தில் 35 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் சேர்த்தது. அதன்பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் திரும்ப ஆரம்பமானது. சோமர்வில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த டாம் லாதம் 52 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார், இடைவேளைக்குப் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் பரிப்போக தொடங்கின.

கேப்டன் வில்லியம்சன் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார் பின்வரிசை வீரர்களும் மிக விரைவில் ஆட்டமிழந்தார்கள் 155 ரன்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது நியூசிலாந்து அணி. இதன் காரணமாக இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனாலும் கடைசி விக்கெட் ஜோடியான அஜாஸ் படேல், ரக்சின் ரவீந்திரா உள்ளிட்ட இருவரும் நங்கூரம் போல நேராக நின்றார்கள் அவர்களுடைய விக்கெட்டை விழுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது ஆகவே போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியிலிருந்து காப்பாற்றியவர் ரவீந்திரா நீண்ட நேரம் களத்தில் நின்றவர் 91 பந்துகளை சந்தித்து விளையாடியிருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கிரிக்கெட் போட்டி ஆரம்பித்த போதே மூத்த வீரர்கள் இல்லாத பேட்டிங் லைன் ஆப் என்ற ஆடுகள் அதிலும் சிறப்பாக வீசக்கூடிய எதிர் அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி உள்ளிட்டவற்றை இந்தியாவின் இளம் படை எப்படி சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் வெற்றி பெறும் நிலையில் கடைசி நிமிடத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் ட்ராவை சந்தித்திருக்கிறது இந்திய அணி. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிசம்பர் மாதம் 3ம் தேதி மும்பையில் நடைபெற இருக்கிறது.