மருக்கள் வைரஸ் தொற்றால் உருவாகிறது. இது HPV வைரசால் உருவாகிறது. உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் மரு வரலாம். இந்த மருவானது முதலில் உடலில் சிறிதாக தோன்ற ஆரம்பிக்கும். இது முகம், கை, கழுத்து, கால் பாதங்கள் மேல் வளர ஆரம்பிக்கிறது. மருக்களில் சாதரணமான மரு, தட்டையான மரு, பாதங்களில் வரும் மரு என பல்வேறு வகைகள் உள்ளது. இந்த மருக்களை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி உதிர வைக்கலாம் என பார்க்கலாம். மருவினால் எந்த வித பிரச்சினை இல்லையென்றாலும் பார்ப்பதற்கு சங்கடமான உணர்வை கொடுக்கும். இந்த மருவை கைகளால் கிள்ளுவதோ, வேறு ஏதாவது பொருட்களை கொண்டு பிடுங்குவதோ கூடாது.
ஆப்பிள் சிடர் வினிகர்
இதில் அசிடிக் கண்டன்ட் அதிகமாக உள்ளது. இதனை பயன்படுத்துவதால் மரு மேலும் வளராமல் உதிர ஆரம்பிக்கும். சிறிதளவு பஞ்சை எடுத்து ஆப்பிள் சிடர் வினிகரில் நனைத்து அதை மரு உள்ள இடத்தில் நன்றாக தடவி வர வேண்டும். இப்படி தொடர்ந்து 5 நாட்கள் செய்து வர மரு உதிர்ந்து விடும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் உள்ள அமினோ ஆசிட் தொற்றுக்களை எதிர்த்து போராடும். கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து மருவின் மீது தடவினாலே போதுமானது.
பேக்கிங் பவுடர்
பேக்கிங் பவுடரை விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து நன்றாக குழப்பி கொள்ளவும். இதை மரு மேல் தடவி கொண்டு பேண்டேஜ் போட்டு கொள்ளவும். இதை இரவு நேரங்களில் 2 அல்லது 3 நாட்கள் செய்தால் மரு உதிர ஆம்பிக்கும்.
வாழைப்பழ தோல்
வாழைப்பழ தோலில் இருக்கும் என்சைம் மரு உதிர உதவுகிறது. வாழைப்பழ தோலை மருவின் மீது தேய்த்தால் போதும் மரு உதிர ஆம்பிக்கும்.
வெள்ளை பூண்டு
இது சருமத்தில் உள்ள பிரச்சினைகளை போக்கும். இது வைரசுடன் போராடுகிறது. மருவை உதிர வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
வெள்ளை பூண்டை பேஸ்டாக செய்து மருவின் மீது வைக்கவும். அல்லது 6 அல்லது 7 பூண்டு பல்லை எடுத்து தோலை உரித்து நன்றாக இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த பூண்டு சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
இந்த இரண்டு சாறுகளுடன் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். பேக்கிங் சோடா கலந்திருப்பதால் நன்கு பொங்கி வரும். பொங்கி முடித்து சாதாரணமாக ஆனவுடன் மரு மீது தடவவும். மரு மீது மட்டும் படுமாறு தடவவும்.
பிறகு ஒரு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். பேக்கிங் சோடா இருப்பதால் சருமத்தில் மற்ற பகுதிகளில் படும்போது எரிச்சல் மற்றும் அலர்ஜி உண்டாகும். பேக்கிங் சோடாவிற்க்கு பதில் சுண்ணாம்பையும் சேர்த்து கொள்ளலாம். இப்படி செய்து வர மரு உதிர ஆரம்பிக்கும்.