மக்களே உஷார்!! வயிற்று புழுக்களால் இவ்வளவு பிரச்சினைகளா!!

0
120
#image_title

நமது உடலில் குடல் ஆரோக்கியமும் முக்கியமான ஒன்றாகும். நமது குடலில் நல்ல பாக்டீரியாக்களும் உள்ளது. தீங்கு விளைவிக்கும்
ஒட்டுண்ணிகளும் உள்ளது. இந்த ஒட்டுண்ணிகள் தான் நமக்கு புழுக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்குகிறது.

வயிற்று போக்கு, மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவை வயிற்றில் புழுக்கள் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளாகும். இந்த புழுக்கள் நாம் உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சி நம்மை எடையிழக்க செய்கிறது. இதில் சிறு குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தோல் எரிச்சல், சரும தடிப்புகள், தசை மற்றும் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றுகிறது. இந்த புழுக்களை எப்படி அகற்றுவது என்பதை பார்க்கலாம்.

குடல் புழுக்கள்
இது மோசமான சுகாதாரம் மற்றும் அசுத்தமான குடிநீர் மூலம் குடலுக்குள் செல்கிறது. இது அசுத்தமான சுற்றுப்புறத்தின் மூலம் மண்ணில் கலந்து விடுகிறது. குழந்தைகள் விளையாடும் போது நகக்கண்களில் கலந்து விடுகிறது.

கைகளை சரியாக சுத்தப்படுத்தாமல் உணவருந்தும் போது இதன் முட்டைகள் உணவுடன் சிறுகுடலுக்குள் சென்று பொரிந்து லார்வா எனப்படும் குறும் புழுக்கள் தோன்றுகிறது. இதனால் வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை, அஜீரணம், உடல் எடை குறைதல் போன்றவை ஏற்படும்.

நாடாப்புழுக்கள்
இந்த புழுக்கள் வெள்ளை நிறத்தில் நீளமாக இருப்பதால் நாடப்புழுக்கள் என கூறப்படுகிறது. இந்த புழுக்கள் சாதாரணமாக எல்லோருக்கும் தொற்றுவதில்லை. அசுத்தமான குடிநீர், இறைச்சியை சமைக்காமல் சாப்பிடுவது, மாடு மற்றும் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு இந்த தொற்று ஏற்படுகின்றன. மாடு மற்றும் பன்றியின் தசைகளில் இதன் லார்வாக்கள் வசிப்பதே காரணம். இதனால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படுகிறது. இந்த நாடாப்புழுக்கள் 50 அடி வரை வளரக் கூடியது. இது 30ஆண்டுகள் வரை உங்கள் குடலில் வாழும்.
புரோட்டோசோவா
புரோட்டோசோவா என்பது குடலில் வாழும் ஒரு ஒற்றை செல் உயிரினம். இதனால் நமக்கு சோர்வு, மற்றும் செரிமான பிரச்சினைகள் உண்டாகும். இது நீர்க்கட்டிகள் வழியாக பரவுகிறது.

ஜியார்டியா
ஜியார்டியா இண்டஸ்டினலிஸ் என்பது ஒரு புரோட்டோசோவான் ஓட்டுண்ணியாகும். இது குடலை பாதிக்கும். இது அசுத்தமான நீர் மற்றும் உணவுகள் மூலம் உண்டாகிறது.

பிளாஸ்டோசிஸ்டிஸ் ஹோமினிஸ்
இது மற்றொரு வகை புரோட்டோசோவா ஆகும். இதுவும் சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் உண்டாகும்.
குடல் புழுக்களை விரட்ட இயற்கை வழிகள்
மாசிபத்திரி, கருப்பு வால்நட்ஸ்,ஆலிவ் இலை போன்றவை புழுக்களின் செயல்பாட்டை குறைக்கிறது. தேங்காய், பூண்டு, பூசணி விதைகள் போன்றவை உணவில் சேர்த்து கொள்ளலாம். தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
குடல் புழுக்களை அகற்ற
3 நாட்கள் விரதம் இருந்து வயிறை காலியாக வைத்திருக்க முயற்சிக்கலாம். பெருங்குடலை சுத்தம் செய்யும் முயற்சியை மேற்கொள்ளலாம்.
பெர்பெரின், ஆரிகனோ மற்றும் திராட்சை விதை எண்ணெய் 3 நாட்கள் பயன்படுத்தலாம்.
சர்க்கரை நிறைந்த பழங்கள், உணவு வகைகள், பால் போன்றவற்றை தவிர்க்கலாம்.

இந்த புழுக்களுடன் சேர்ந்து நல்ல பாக்டீரியாக்களும் அழிய வாய்ப்பு உள்ளது. எனவே புழுக்கள் அழிந்த பிறகு புரோபயாடிக் உணவுகளான தயிர், கெஃபிர், கிம்ச்சி போன்ற உணவுகளை சேர்த்து கொள்ளலாம். இவற்றை மீறி புழுக்களின் தொந்திரவு இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறலாம்.

author avatar
CineDesk