முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய்! இந்த இலையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்!

0
264
#image_title

முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய்! இந்த இலையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. இது மாறிவரும் உணவு பழக்கம் ,வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. மேலும் நம் உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் பொழுது இந்த முடி உதிர்தல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் ஐந்து கற்றாழையை பெரிய துண்டாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் உட்பகுதியில் உள்ள செல்லை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் வேண்டும். பிறகு அதனுடன் 5 பொதினா இலைகளை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் நாம் அரைத்து வைத்திருந்த ஜல்லை ஒரு கப் அளவிற்கு ஊற்றி அதனுடன் ஒரு கப் அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கலந்து கொதிக்க விட வேண்டும். கலந்துவிட்ட பின் அதனுடன் ஒரு கரண்டி அளவு கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்துக்கொண்ட பிறகு அதனுடன் விளக்கெண்ணையை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு அந்த எண்ணையை தினமும் தலையில் தேய்த்துவர முடி உதிர்தல் முற்றிலும் நின்றுவிடும்.

Previous articleதர்பூசணி விதைகளில் இவ்வளவு மருத்துவ குணங்களா?
Next articleஐஸ் வாட்டர் ஆபத்து! ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றி தெரியுமா..?