தர்பூசணி விதைகளில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

0
702
1164861842

தர்பூசணி விதைகளில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

கோடை காலம் துவங்கிய உடன் நாம் கடைகளில் தர்பூசணி பார்க்க முடியும். கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ல தர்பூசணி பழம் மற்றும் பழச்சாற்றை நாம் எடுத்து கொள்வது வழக்கம்.

ஆனால் நாம் தர்பூசணி பழத்திலிருந்து தூக்கி எரியும் தர்பூசணி விதைகள் நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது தெரியுமா?

தர்பூசணி விதைகளை வறுத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

 • ஒரு கையளவு தர்பூசணி விதையை 1 லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி 3 நாட்கள் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்தால், ரத்த சர்க்கரையின் அளவு குறைவதோடு, சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.
 • இதயம் ஆரோக்கியமாக இருக்க, தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.
 • அழகான மற்றும் வலிமையான தலைமுடி வேண்டுமெனில், அதற்கு தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும். தர்பூசணி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைத் தடுக்கும்.
 • தர்பூசணி விதையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிர்ச்சத்துகள் உள்ளதால், அதில் தயாரிக்கப்பட்ட தேநீரைக் குடித்து வந்தால் அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். அதற்கு தர்பூசணி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
 • தர்பூசணி விதைகள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு தர்பூசணி விதைகளில் உள்ள அர்ஜினைன் என்னும் உட்பொருள் தான் முக்கிய காரணமாகும்.
 • தர்பூசணி விதையில் உள்ள அர்ஜினைன் மற்றும் லைசின் போன்ற அமினோ அமிலங்கள் வலிமையான எலும்புகள் மற்றும் திசுக்கள் மனித உடலின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதுடன், எலும்புகள் மற்றும் திசுக்களை வலிமைப்படுத்துகிறது.
 • தர்பூசணி விதைகளில் உள்ள விட்டமின் B காம்ப்ளக்ஸ், நியாசின், ஃபோலேட், தயமின், வைட்டமின் B6 போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இது நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று கூறுவார்கள். அதன் படி அதிகமாக தர்பூசனியை எடுத்து கொள்ள கூடாது.

 • தர்பூசணியை அறுத்த உடன் சாப்பிடவும். பொதுவாகவே பழங்களை நீண்ட நேரும் அறுத்து வைத்த பின் சாப்பிட்டால் கிருமிகளின் தொற்று ஏற்படும். அது, தர்பூசணியில் அதிகமாய் ஏற்படுகிறது.
 • தர்பூசணியில் 92% நீரின் பங்கு கொண்டிருப்பதால், அஜீரண கோளாறு, வயிற்றுப் போக்கு மற்று வயிறு உப்புசம் அடைதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
 • தர்பூசணியில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதால், இது நமது உடலினுள் சுலபமாக கொழுப்பாக மாறும் தன்மை உடையது ஆகும். எனவே, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள். தர்பூசணியில் கொழுப்பு இல்லையே என நினைத்து அதிகம் சாப்பிட வேண்டாம்.
 • சளி அல்லது கபம் பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணியை சாப்பிட வேண்டாம். அப்படி மீறி நீங்கள் அதிகப்படியான தர்பூசனியை உட்கொண்டால் காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சிறுநீர் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
 • சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் தர்பூசணியை சாப்பிட வேண்டாம். இதில் உள்ள அதிகப்படியான நீரின் அளவு உங்களது சிறுநீரக பிரச்சனையை அதிகப்படுத்திவிடும்.

தர்பூசணி பயன்கள்,தர்பூசணி வயாகரா,தர்பூசணி விதை பயன்கள்,தர்பூசணி விதை ஆண்மை,ஒரே வாரத்தில் ஆண்மை அதிகரிக்க,ஆண்மை அதிகரிக்க நாட்டு மருந்து,ஆண்மை அதிகரிக்க உணவுகள்,ஆண்மை அதிகரிக்க வழி,ஆண்மை அதிகரிக்க நாட்டு மருந்து,ஆண்மை வீரியம் அதிகரிக்க,ஆண்மை அதிகரிக்கும் விதைகள்,ஆண்மை அதிகரிக்க உடற்பயிற்சி,ஆண்மை அதிகரிக்க மந்திரம்

author avatar
Parthipan K