பிரமிக்க வைக்கும் “கங்குவா” கிளிம்ஸ் செய்த சாதனை!! ஒரு வாரத்தில் தெரிக்கவிட்ட சூர்யா!!

0
159
Amazing feat of “Kangua” Klims!! Surya has not seen in a week!!
Amazing feat of “Kangua” Klims!! Surya has not seen in a week!!

பிரமிக்க வைக்கும் “கங்குவா” கிளிம்ஸ் செய்த சாதனை!! ஒரு வாரத்தில் தெரிக்கவிட்ட சூர்யா!!

திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் சூர்யா.இவர் நடிப்பு திறமையால் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகம் செய்யப்பட்ட முதல் படத்திலேயே வணிக ரீதியாக வெற்றி படத்தை கொடுத்தார். ஆரம்ப காலக்கட்டத்தில் சூரியாவிற்கு ஆட தெரியவில்லை என்றும் குள்ளமாக இருக்கிறார் என்றும் பலர் கேலி கிண்டல் செய்து வந்தனர்.

ஆனால் இப்பொழுது அவர் ஆடாத ஆட்டம் இல்லை மற்றும் அவர் சென்ற உயரத்தின் மதிப்பு உச்சக்கட்டம் என்றே கூறலாம். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் இதுவரை 4 பிலிம்பேர் விருதுகளையும் ,2 எடிசன் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சூர்யா அவர்கள் நடித்து கொண்டு இருக்கும் படம் “கங்குவா” .இந்த படத்தை அண்ணாத்த பட இயக்குனர் சிவா  இயக்கி வருகின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகின்றது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைபற்றியுள்ளது.

இந்த நிலையில் கங்குவான் படத்தின் பிலாஸ் பேக் காட்சிகள் படபிடிப்பு செய்யப்பட்டு கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோ  வெளியிடப்பட்டது.இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வைரலகி கொண்டு வருகின்றது.

தற்பொழுது இணையதளத்தில் 3 மற்றும் 4 கோடி பார்வையாளர்களை கொண்டு அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக மாறி சாதனை படைத்துள்ளது.

Previous articleகுடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!!
Next articleஇயக்குனர் லோகேஷ்க்கு டஃப் கொடுக்கும் ரசிகர்கள்!! லியோ “ஒன் லைன் ஸ்டோரி லீக்” அதிர்ச்சியில் படக்குழு!!