ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு அற்புத வீட்டு வைத்தியம்!! முதல் முயற்சியில் பலன் காணலாம்!!

Photo of author

By Divya

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு அற்புத வீட்டு வைத்தியம்!! முதல் முயற்சியில் பலன் காணலாம்!!

Divya

உங்களுக்கு மாதவிடாய் சீரற்று இருந்தால் இந்த வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பிசின்
2)பால் அல்லது தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

பாதாம் பிசின் நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.இந்த பாதாம் பிசின் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

4 முதல் 5 மணி நேரம் வரை பாதாம் பிசினை ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் மாட்டு பாலை பாத்திரம் ஒன்றில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஊறவைத்த பாதாம் பிசினை அதில் போட்டு மிக்ஸ் செய்து குடித்தால் மாதவிடாய் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பிசின்
2)தேன்

செய்முறை விழாக்கம்:-

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி பாதாம் பிசின் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு பாதாம் பிசினில் தேவையான அளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து சாப்பிட வேண்டும்.

இந்த பாதாம் பிசினை உட்கொண்டு வந்தால் மாதவிடாய் கோளாறு,அதிக உதிரப்போக்கு,கருப்பை சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

பாதாம் பிசின் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அதிகரிக்கும்.உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பாதாம் பிசின் சாப்பிடலாம்.சருமப் பிரச்சனைகள் அகல பாதாம் பிசின் சாப்பிடலாம்.

பருவகால பாதிப்புகளில் இருந்து மீள பாதாம் பிசினை உட்கொள்ளலாம்.பாதாம் பிசினை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பிசின்
2)பால்
3)தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் பாதாம் பிசினை ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு ஊறவைத்த பாதாம் பிசினை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.மாதவிடாய் கால வயிற்று வலி,வயிறு பிடிப்பு போன்ற பாதிப்புகள் வராமல் இருக்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிடலாம்.