மாயம் செய்யும் கீழாநெல்லி பற்றி நீங்கள் அறியாத அற்புதமான மருத்துவ பயன்கள்!!
நம் அனைவரும் அறிந்த ஒரு அற்புதமான மூலிகை செடியை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதுதான் கீழாநெல்லி. கீழாநெல்லியில் எவ்வளவு நோய்களை வேண்டுமானாலும் குணப்படுத்தக்கூடிய சக்தி உள்ளது. எனவே இந்த கீழாநெல்லியின் அற்புதமான மருத்துவ பயன்களை இங்கு பார்க்கலாம்.
இந்த கீழாநெல்லியின் தண்டு வேர் விதை பால் என அனைத்தையுமே ஆயுர்வேதத்தில் பயன்படுத்துகிறார்கள்.
இந்த கீழாநெல்லி கல்லீரல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்த அற்புத மருந்தாகும். இந்த கீழாநெல்லியின் வேர்களை பாலில் கலந்து கொதிக்க வைத்து குடித்தால் கல்லீரல் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் சரியாகும் என்பதை ஆயுர்வேதத்தில் நிரூபித்துள்ளார்கள்.
மஞ்சள் காமாலை நோய்க்கு இந்த கீழாநெல்லி சிறந்த மருந்து என்று அனைவரும் கூறுவார்கள். கீழாநெல்லியில் எப்படிடிஸ் அதிகமாக இருப்பதால் இந்த கீழாநெல்லியை வேருடன் எடுத்து வந்து உரலில் நன்கு இடித்து அதன் சாறை மோரின் கலந்து மூன்று நாட்களுக்கு காலை மாலை குடித்து வர மஞ்சள் காமாலை நிரந்தரமாக குணமாகும்.
இந்த காலத்தில் சுவாச பிரச்சனையால் பலரும் சிரமப்படுகின்றனர். இதற்கு கீழாநெல்லியின் சாறுடன் கற்கண்டை சேர்த்து குடித்து வர சுவாச பிரச்சனை தீரும்.
சிலர் சரும அரிப்பு படர்தாமரை போன்ற சரும பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு கீழாநெல்லியை உடலில் நன்கு இடித்து பேஸ்ட் ஆக அரைத்து அதனுடன் சிறிதளவு உப்பை சேர்த்து சரும பிரச்சனை இருக்கும் இடத்தில் தடவி வர சரும பிரச்சனை குணமாகும்.
பசி நன்கு எடுக்க இந்த கீழாநெல்லி இலையை மென்று சாப்பிட்டால் நல்லது. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.
உடம்பில் ஏதேனும் ஒரு இடத்தில் எலும்பு முறிந்து விட்டால் இந்த கீழாநெல்லி இலையை உரலில் நன்கு இடித்து எலும்பு முறிவுற்ற இடத்தில் தேய்த்து கட்டி விடவும். இவ்வாறு செய்வதால் அந்த இடத்தில் உள்ள எலும்பு வலி மற்றும் வீக்கம் குறைந்து எலும்பு ஒற்றல் ஏற்படும்.
கிட்னியில் கல் உள்ளவர்கள் இந்த கீழாநெல்லியை கஷாயமாக செய்து குடித்து வர கற்கள் வெளியேறும்.
ஜுரம் உள்ளவர்கள் இந்த கீழாநெல்லியை நன்கு உரலில் இடித்து உருண்டையாக பிடித்து சாப்பிட்டு வர ஜுரம் உடனடியாக குணமடையும்.