MX PLAYER-யை வாங்கும் அமேசான் நிறுவனம்!

0
397
#image_title
MX PLAYER-யை வாங்கும் அமேசான் நிறுவனம்!
MX PLAYER-யின் OTT தளத்தை அமேசான் நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மதிப்பில் 400 கோடி மதிப்பில் ஒப்பந்தம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் வளர்ச்சி அபார வளர்ச்சியாக உள்ளது் தொழில்நுட்பங்கள் வளர, வளர நாம் செல்போனையும், கணினியும் அதிகம் பயன்படுத்துகிறோம். திரைப்படம் பார்க்க தியேட்டர்களுக்கு போன காலம் போய் வீட்டிலேயே செல்போன் மூலமே புதுப்படங்களை பார்க்கும் வசதி வந்துவிட்டது.
புதிய, புதிய வெப் சீரியஸ்கள் புதிய திரைப்படங்கள் என அனைத்தும் ஓடிடி தளங்கள் மூலம் நாம் எங்கும் காணலாம்.  இதனால் ஓடிடி தளங்களுக்கு மவுசு பல மடங்கு கூடிவிட்டது. ஓடிடி நிறுவனங்களும் கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வருகின்றனர்.
ஓ.டி.டி தளங்களில் நிறைய ஆபாச குறும்படங்கள், வெப் சீரியஸ்கள் உள்ளதும், தொடர்ந்து இதுபோன்ற படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. மத்திய அரசும் தற்போது ஓடிடி தளங்களுக்கு சில கட்டுபாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது.
அமேசான் பிரைம், ஜி-5, நெட் பிலிக்ஸ் போன்ற இந்தியாவின் பிரபலமான ஓடிடி தளங்கள் உள்ளன. இந்நிலையில், பிரபல ஓடிடி தளமான எம்.எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தை அமேசான் நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி குயின் அஸ்ராம் உள்ளிட்ட பிரபலமான வெப் சீரியஸ்கள் எம்.எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் உள்ளது. மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு டைம்ஸ் குழுமம் MX PLAYERயரை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Previous articleதிவாலான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்! 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி.?
Next articleபொற்காலத்தை நோக்கி தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது – நடிகர் கமல்ஹாசன்!!