கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்! ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த மட்டமான செயல்!

Photo of author

By Kowsalya

கேரளாவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் கொரோனா பாதித்த 2 பெண்கள் 108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனர். அப்பொழுது ஒரு பெண்ணை அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் இறக்கிவிட்டுள்ளனர்.

மற்றொரு பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யாரும் இல்லாத பகுதியில் ஆம்புலன்ஸை நிறுத்திய ஓட்டுநர், கொரோனா பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மருத்துவமனையை அடைந்ததும் பாதிக்கப்பட்ட பெண், டாக்டர்களிடம் தனக்கு நேர்ந்த கொடூரத்தை சொல்லியுள்ளார். மருத்துவப் பரிசோதனையில்,பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அடுத்த சில மணி நேரங்களிலேயே‌ டிரைவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஏற்கனவே சில வழக்குகளில் அவர் சிக்கியுள்ளது தெரியவந்தது.

ஆம்புலன்ஸ் டிரைவராக பணிக்கு சேரும் நபர்களின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என, சுகாதார அதிகாரிகளுக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு ஒன்றில் அந்த நபர் குற்றவாளியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து அனைவரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.