இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!!

0
154
Ambulance will not get stuck in traffic anymore!! New M Siren Smart Ambulance Project Launched!!

இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!!

காவல் துறை அதிகாரி கபில் குமார் சி.சரத்கர் அவர்களால் சென்னையில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காமல் இருக்க எம்.சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை மாநகரில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் சிக்கி கொள்கின்றது.இதில் சிகிச்சைக்காக இருப்பவர்,மருத்துவம் தேவைப்படுவோர் மற்றும் விபத்துகளில் காயம் அடைந்தவர் என்ற அனைவரும் அவசர நிலையில் இருப்பதால் இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக கால தாமதம் ஆகிவிடுகின்றது.

இதனால் சில சமயங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. அதிலும் விபத்தில் சிக்கியவர்களை ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது.

இதன் விளைவாக நோயாளிகளை விரைவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து எம் சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் இதில் பொருத்தப்பட்டுள்ள சைரன்   ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு 200 மீட்டர் தொலைவுக்கு முன்னரே ஆம்புலன்ஸ் வரும் திசையை எல்இடி திரையில் ஒளிபரப்பும்.

இதன் மூலம் காவலர்கள் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னரே மற்ற வாகனங்களை அப்புறப்படுத்துவார்கள். முதல் கட்டமாக 3 தனியார் மருத்துவமனைகளில் 25  எம் சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டது.

சென்னையில் தான் முதன்முறையாக இந்த திட்டம் காவல்துறை அதிகாரி கபில் குமார் சி.சரத்கர் அவர்களால் தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக கால தாமதமின்றி செல்லும் என்று கருதப்படுகிறது.

Previous articleஇனிமேல் காரணமின்றி இதை செய்தால் அபராதம்  3 மாதம் சிறை!  தெற்கு ரயில்வே வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை!!
Next articleஅமேசான் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! மெகா தள்ளுபடி வெளிவந்த அருமையான அறிவிப்பு!!