சொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா!

Photo of author

By Sakthi

நோய் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நம்முடைய நாட்டிற்கு அமெரிக்காவின் முதல் கட்ட நிவாரண பொருட்கள் தற்சமயம் வந்து சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவின் ராணுவவிமானம் நேற்று அமெரிக்காவில் இருந்து கிளம்பி இன்று இந்தியா வந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்தது. இந்தியாவின் அந்த செயலை ஐநா சபையும் பாராட்டியது. ஆனால் தற்சமயம் இரண்டாவது அலையால் இந்தியா மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது. நாள்தோறும் கிட்டத்தட்ட 3.60 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்தியா தற்சமயம் இருந்து வருகிறது.

இந்த நோய் தொற்றுக்கு எதிராக கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவிற்கு உதவுவதற்கு பல்வேறு உலக நாடுகள் முன் வந்திருக்கின்றன. அந்த விதத்தில் அமெரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் செயற்கை நுரையீரல் காற்றோட்டத்துடன் கூடிய இயந்திரங்கள் இன்னும் பல தேவையான மருத்துவ பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முன்வந்து இருக்கின்றன.

அந்த விதத்தில் அமெரிக்காவின் 400 ரக போர் விமானம் சுமார் 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஒரு மில்லியன் நோய்தொற்று பரிசோதனை கருவிகள் இன்னும் பல உபகரணங்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டிருக்கின்றஅதனுடைய வலைதள பதிவில் 70 ஆண்டுகால நட்பின் தொடர்ச்சியாக அமெரிக்கா எப்போதும் இந்தியாவுடன் இருந்துவருகிறது. நோய்தொற்று நெருக்கடியில் கூட நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்#USIndia Dosti என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் இருந்து நோய்த்தொற்று நிவாரணம் தொடர்பான முதல் தொகுப்பு இந்தியா வந்திருக்கிறது. இது வெறும் முதல் கட்ட தொகுப்பு மட்டும்தான் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க மக்கள் நன்கொடை அளிக்கும் உபகரணங்களுடன் இந்தியாவுக்கு வரும் என்று அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் நோய்த்தொற்று தொடர்பாக தெரிவிக்கும்போது, நோய்த்தொற்றின் ஆரம்பத்தில் அமெரிக்க மருத்துவமனையில் ஏற்பட்ட அழுத்தத்தை தணிப்பதற்காக இந்தியா அமெரிக்காவிற்கு உதவ முன்வந்தது. அதேபோல தற்சமயம் இந்தியாவிற்கு தேவைப்படும் இந்த சமயத்தில் இப்போது நாங்கள் இந்தியாவுடன் இருக்கின்றோம் என்று கூறியிருந்தார்.

அதேபோல ஓரிரு தினங்களில் 100 மில்லியன் டாலர் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.