வாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரிய வழக்கு! குட்டு வைத்த நீதிமன்றம்!

0
70

தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளிலும் சென்ற ஆறாம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்றே கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாக்கு எண்ணிக்கைக்கு தடை வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் பண பலத்தை தடுப்பதற்கு இரண்டு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அறிவித்த சமயத்தில் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்து இருந்ததாகவும், ஆனாலும் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் சார்பாக பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

பல தொகுதிகளில் நடைபெற்ற பணப்பட்டுவாடா குறித்த தகவல் போன்ற ஆதாரங்களுடன் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழ்நாட்டில் மட்டும் 430 கோடி ரூபாய் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பணப்பட்டுவாடா குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமனம் செய்து விசாரணை செய்ய கோரியும் வாக்கு இன்னைக்கு நிறுத்தி வைக்குமாறும், அதே போல தன்னுடைய புகாரை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் அவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தவிட்ட நீதிபதிகள் இனி இதுபோன்ற காரணங்களுக்காக வழக்கு தொடர்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவரை எச்சரித்தனர்.