பிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி

Photo of author

By Parthipan K

அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக  அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது அப்போது  சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. காணொலி மூலமாக நடந்த விசாரணையின் போது 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின்  பெரு நிறுவனங்கள்,  சிறு நிறுவனங்களை தங்களது வளர்ச்சிக்காக முடக்கி, மக்களின் தேர்வு செய்யும் உரிமையை பறிக்கப்படுவதாக புகார் கூற்ப்பட்டது.  ஆனால், ஆப்பிள், அமேசான் மற்றும் கூகுள் மற்றும்  ஆகிய நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தன. அதேசமயம், தாங்கள் அமெரிக்காவை சேர்ந்த பெருநிறுவனம் இல்லை எனவும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.