இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணின் பெயரை வைத்த அமெரிக்க நிறுவனம்

Photo of author

By Parthipan K

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணின் பெயரை வைத்த அமெரிக்க நிறுவனம்

Parthipan K

அமெரிக்க சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ‘ நார்த்ரோப் க்ரம்மன் ” வர்த்தக ரீதியிலான விண்கலத்துக்கு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் இது. இதற்கு ‘எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காக கல்பனா சால்வா பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.