வெள்ளைப்படுதல் முதல் மாரடைப்பு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வெண்டைக்காய் நீர்!!

0
163
Amla water is the only solution for all problems from whitening to heart attack!!
Amla water is the only solution for all problems from whitening to heart attack!!

வெள்ளைப்படுதல் முதல் மாரடைப்பு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வெண்டைக்காய் நீர்!!

“வெண்டைக்காயை சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும்”என்பார்கள் .கணக்கு வருகிறதோ இல்லையோ ஏராளமான சத்துகளை வாரி வழங்கும் இயற்கையின் கொடை அது .வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதிக்கரை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. இன்று தமிழகத்தில் அதிகம் விளையும் காய்கறிகளில் ஒன்றாகி விட்டது.

வெண்டைக்காய் வளவளப்பு தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதில் உள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப் பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்தநீர் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரைப் பருகுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினமும் இந்த நீரை அருந்துவதால் ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்த திரவத்தை அருந்தினால் நீரிழிவு தடுக்கப்படுவதுடன் உடல் குளுமை பெறும் .எலும்புகள் வலிமை பெற்று ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கப்படும்.

வெண்டைக்காயில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் வைட்டமின் சி நிறைந்துள்ளன. எனவே இந்த நீரை அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் ஊறிய நீர் அருந்துவது நல்லது. குறிப்பாக ஆஸ்துமா கோளாறு சரியாகும். பிஞ்சு வெண்டைக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரை சேர்த்து குடித்தால் இருமல் ,நீர்க்கடுப்பு,வெள்ளைப்படுதல் சரியாகும்.

வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால்,கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு ,இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.இரத்த சோகை, மூச்சிரைப்பு,நீரிழிவு,கொலஸ்ட்ரால்,மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வை குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.