ஆரஞ்சு பழ தோலை இப்படி பயன்படுத்துங்கள் பற்கள் வெள்ளையாக மாறிவிடும்!!

0
95

ஆரஞ்சு பழ தோலை இப்படி பயன்படுத்துங்கள் பற்கள் வெள்ளையாக மாறிவிடும்!!

நாம் என்ன தான் பேஸ்ட் பிரஸ் பயன்படுத்தி ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் சிலருக்கு பற்களில் கறை படிந்து விடுகிறது. இதனால் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் அவர்கள் தயங்குவார்கள். இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்குவதற்கு இயற்கையான வழிகளை காணலாம்.

பல் முளைக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கின்ற பற்கள். வயது ஆக ஆக அந்தப் பொலிவு குறைந்து பற்களில் கரையோ அல்லது மஞ்சள் மஞ்சள் நிறமாகவோ மாறிவிடுகிறது.

இது போன்ற பற்களை கொண்டவர்கள் பற்களை வெண்மையாக காட்டிக்கொள்ள பல் பல் மருத்துவரிடம் சென்று பற்களை அடிக்கடி பிளீச்சிங் செய்து வெண்மையாக்கி கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதினால் பற்கள் வெண்மையாகும். ஆனால், பற்களின் வலிமை குறைந்து விடும்.

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி ஐந்து நிமிடம் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் காலையில் செய்து வருகையில் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி பற்கள் வெண்மையாக மாறும்.

பற் கறைகளை அகற்ற சமையல் சோடா சிறந்த தேர்வாக அமையும். அமெரிக்கன் டென்டல் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்க உதவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரஞ்சு பல தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்கவேண்டுமென்று நினைப்பவர்கள் ஆரஞ்சு பழத்தின் தோலை எடுத்து பற்களில் தேய்த்து வருகையில் பற்கள் வெண்மையாக மாறிவிடும்