அம்மா உணவகம் அவல நிலைக்கு தள்ளப்பட்டது!! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!
தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அம்மா உணவகங்கள் அனைத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக கண்டனம் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம்.
இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனர்.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அம்மா உணவங்கள் அனைத்தும் கேட்பாரற்று நிலைக்கு தள்ளப்பட்டதாக கண்டனம் தெரிவித்தார்.அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் நிதி வழங்காதது,பணியாளர்களை நீக்குவது மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திதராதது இவை அனைத்தும் அம்மா உணவகங்களை நிறுத்துவதற்கான முயற்சி என்றார்.
மேலும் உணவகங்களில் தயாரிக்கபடும் உணவுகள் அனைத்தும் தரமற்று இருப்பதோடு குறைந்த அளவே தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதனால் உணவருந்த வருவோர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து கொண்டே வருகின்றது என்றார்.
திமுக பொறுப்பேற்ற பின்புதான் அம்மா உணவகம் கவனிப்பின்றி அனாதையாக காட்சி அளிக்கின்றது என்றார்.இது குறித்து எந்த கருத்தும் அதிகாரிகள் தெரிவிக்க வில்லை என்றும் சென்ற 2021 ம் முன்பே இது போன்ற நிலைமை நிலவுவதாகவும் அதற்கான அறிக்கைகள் பெறப்பட்டது.இருப்பினும் இதற்கான நிதிகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் இது போன்ற பதிலை தெரிவித்து வருகிறனர்.இப்பொழுது தெளிவாக தெரிகிறது நமது நாட்டில் திறமையற்ற ஆட்சி நடக்கிறது என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மா உணவகங்களில் தரமான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை கேட்டு கொள்வதாகவும் அவர் கூறினார்.