கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!

0
263
#image_title
கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!
நேற்று அதாவது மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து தொலைபேசியில் மாணவர் க்ரித்தி வர்மாவை அழைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று கைகள் இல்லாத மாணவர் க்ரித்தி வர்மா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து இவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
மாணவர் க்ரித்தி வர்மா மற்றும் அவரது தாயாரை தொலைபேசி மூலம் அழைத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பேசினார். பத்தாம் வகுப்பில் கைகளை இழந்தும் 437 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர் க்ரித்தி வர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து மேலும் மாணவர் க்ரித்தி வர்மாவின் மேல் படிப்பின் செலவுகளை அரசு ஏற்கும் என்றும் கூறினார்.
இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவருடயை டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவகளில் வெற்றி பெற்று தனது கல்வியின் அடுத்த நிலைக்கு செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகளை பார்க்கும் பொழுது மாணவர் க்ரித்தி வர்மா அவரது வெற்றிச் செய்தி என்னை கவனம் ஈர்த்தது. மாணவர் க்ரித்தி வர்மா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் தாயாரை தொடர்பு கொண்டேன். மாணவர் க்ரித்தி வர்மா அவர்களுக்கு செயற்கை கைகள் பொருத்திட  தேவையான மருத்துவ நடவடிக்கைகளை எடுக்க மக்கள் நலவாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நம்பிக்கை ஒளியென்று மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா அவர்கள் மேற்படிப்பு பலவும் கற்று சிறந்து விளங்கிட வேண்டும். மாணவர் க்ரித்தி வர்மா அவர்களுக்கு நாம் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
Previous articleஉலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! கோப்பையை வெளியிட்ட ஆஸ்திரேலிய லெஜன்ட் கிரிக்கெட்டர்!!
Next articleபுஷ்பா தீ ரூல் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!  இயக்குநர் சுகுமார் தெரிவித்த தகவல்!!