புஷ்பா தீ ரூல் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!  இயக்குநர் சுகுமார் தெரிவித்த தகவல்!!

0
237
#image_title
புஷ்பா தீ ரூல் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!  இயக்குநர் சுகுமார் தெரிவித்த தகவல்!
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா 2 புஷ்பா தீ ரூல் திரைப்படத்தின் முக்கிய தகவலை படத்தின் இயக்குநர் சுகுமார் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ராவ் ரமேஷ், சுனில், பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு புஷ்பா தி ரைஸ் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இந்த திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக வெளியானது. பான் இந்தியன் படமாக வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் 350 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இதையடுத்து தற்போது புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி தற்போது பெங்களூரில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் இயக்குநர் சுகுமார் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் பகத் பாசில் அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சுகுமார் அவர்கள் இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து  இந்த தகவலை கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது.